யாரும் தப்பா நினைக்காதீங்க.. ஐபிஎல் 2024 தொடரில் விலகியதன் சோகமான காரணத்தை தெரிவித்த ஹரி ப்ரூக்

Harry Brook
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் விளையாட உள்ளது மிகப்பெரிய உத்வேகமாக அமைய உள்ளது.

இருப்பினும் அந்த அணிக்காக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து சேர்ந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவித்துள்ளார். 2022 அண்டர்-19 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான அவர் கடந்த வருடம் பாகிஸ்தான் மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

சோகமான காரணம்:
அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக 13.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் ஒரு போட்டியை தவிர்த்து சுமாராக செயல்பட்டார். அதனால் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது டெல்லி அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். எனவர் இம்முறை சிறப்பாக விளையாடி தன்னுடைய தரத்தை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி நேரத்தில் விலகியது டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பாட்டி இயற்கை எய்தியதால் தற்சமயத்தில் நன்றாக விளையாடும் மனநலையில் இல்லை என்று ஹரி ப்ரூக் கூறியுள்ளார். அதனாலயே ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது பின்வருமாறு. “எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளதை உறுதி செய்கிறேன்”

- Advertisement -

“டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நான் அங்கு சென்று விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். இந்த முடிவின் பின்னணியில் என்னுடைய தனிப்பட்ட காரணங்களை பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் அதற்கான காரணம் என்ன என்று பலரும் கேட்பார்கள் என்பது தெரியும். எனவே அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்”

இதையும் படிங்க: பாண்டியா கேப்டனா வந்தா மட்டும் போதாது.. அதை செய்யலைன்னா மும்பை வீக்’கான அணியாகிடும்.. ஏபிடி கருத்து

“கடந்த மாதம் என்னுடைய பாட்டியை நான் இழந்தேன். அவர் எனக்கு பாறையைப் போன்ற ஆதரவாக இருந்தார். குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை அவருடைய வீட்டில் கழித்தேன். என்னுடைய வாழ்க்கையின் அணுகுமுறை மற்றும் கிரிக்கெட் வாழ்க்கையை அவரும் என்னுடைய மறைந்த தாத்தாவும் தான் வடிவமைத்தனர். இங்கிலாந்துக்காக நான் விளையாடியதை அவர் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டில் நான் வென்ற சில விருதுகளை அவர் சேகரித்து மகிழ்ச்சியுடன் இருந்தது எனக்கு பெருமையானதாகும்” என்று கூறினார்.

Advertisement