பாண்டியா கேப்டனா வந்தா மட்டும் போதாது.. அதை செய்யலைன்னா மும்பை வீக்’கான அணியாகிடும்.. ஏபிடி கருத்து

AB De Villiers 7
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடமே மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு பாண்டியா அசத்துவாரா? என்று கேள்வி காணப்படுகிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக வளர்ந்து இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அசத்திய அவர் 2022 ஐபிஎல் தொடரில் அனுபவம் இல்லாத கேப்டன்ஷிப் பதவியில் முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

ஏபிடி கருத்து:
எனவே அதே போல தம்மை வளர்த்த மும்பைக்காகவும் கேப்டனாக களமிறங்கும் முதல் வருடத்திலேயே பாண்டியா கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் கேப்டனாக மட்டுமின்றி நல்ல வேகப்பந்து வீச்சாளராகவும் ஹர்திக் பாண்டியா செயல்பட்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி சமநிலையுடன் வலுவாக இருக்கும் என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

மேலும் காயத்தால் கடந்த ஐபிஎல் தொடரில் விலகிய ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணிக்காக மீண்டும் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா மீண்டும் கம்பேக் கொடுப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவசியமானதாகும். இல்லையெனில் பார்ப்பதற்கு வலுவாக தெரிந்தாலும் உண்மையாக அவர்களின் அணியில் பேலன்ஸ் இருக்காது”

- Advertisement -

“இம்முறை ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய வேலையை செய்வார் என்று நினைக்கிறேன். குறிப்பாக இம்முறை அவர் பந்தை தன்னுடைய கையில் பிடிப்பார் என்று நம்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஒரு ஆல் ரவுண்டராகத் தான் அதிகமாக தேவைப்படுகிறார். பும்ரா இம்முறை பந்து வீசுவதை பார்ப்பதற்கு நான் காத்திருக்கிறேன். சமீபத்திய டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அவர் அபாரமாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: கடந்த 9 மாதத்தில் என்னோட பேட்டிங் முன்னேற அவங்க 2 பேர் தான் காரணம்.. ஜெய்ஸ்வால் பேட்டி

“எனவே கடினமான சூழ்நிலையில் உங்களுடைய அணிக்கு பும்ரா தேவைப்படுவார். 10க்கு 9 தருணங்களில் அவர் உங்களுக்காக அசத்துவதற்கு வருவார். அவர் வேலையை கச்சிதமாக செய்து பெரிய விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பையின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா முதல் போட்டியிலேயே தன்னுடைய முன்னாள் அணியான குஜராத்துக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement