492 ரன்ஸ்.. தார் ரோட்டில் பாகிஸ்தானை விளாசும் இங்கிலாந்து.. ப்ரூக் உலக சாதனை.. கவாஸ்கரை முந்தி ரூட் சாதனை

PAK vs ENG
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி முல்தானில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அபாரமாக விளையாடி 556 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆகா சல்மான் 104* ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்துக்கு கேப்டன் ஓலி போப் டக் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி அதிரடியாக விளையாடி 78 (85) ரன்கள் குவித்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்தனர்.

- Advertisement -

வெளுக்கும் இங்கிலாந்து:

3வது விக்கட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 84 (75) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். அவருடன் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் தம்முடைய பங்கிற்கு பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு சதமடித்தார்.

குறிப்பாக பிட்ச் தார் ரோட் போல இருந்ததை பயன்படுத்தி அட்டகாசமாக விளையாடிய அந்த ஜோடி 3வது நாள் முடிவில் பிரியாமல் 4வது விக்கெட்டுக்கு 243* ரன்கள் குவித்துள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இங்கிலாந்து ஜோடியாக ப்ரூக் – ரூட் சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 2022ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் 233 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

ஹரி ப்ரூக் உலக சாதனை:

அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் 3வது நாள் முடிவில் 492-3 ரன்கள் இங்கிலாந்து இன்னும் 64 ரன்கள் ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 176*, ப்ரோக் 141* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்தப் போட்டியில் ஜோ ரூட் தனது 35வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சுனில் கவாஸ்கர், பிரைன் லாரா, ஜெயவர்த்தனே, யூனிஸ் கான் ஆகியோரின் சாதனைகளை உடைத்துள்ள ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: நிச்சயமாக இந்திய அணிக்காக நான் இதை செய்வேன்.. அர்ஷ்தீப் சிங் அளித்த வாக்குறுதி – விவரம் இதோ

இதற்கு முன் மேற்குறிப்பிட்ட 4 ஜாம்பவான்களும் 34 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதை விட 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் சதமடித்திருந்தார். எனவே தற்போதைய சதத்தையும் சேர்த்து பாகிஸ்தான் மண்ணில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஹரி ப்ரூக் படைத்துள்ளார்.

Advertisement