ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அந்தத் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் டெல்லி அணி விளையாட உள்ளது. அந்த அணிக்காக விளையாட இங்கிலாந்து சேர்ந்த இளம் நம்பிக்கையின் நட்சத்திர வீரர் ஹரி ப்ரூக் 6.25 கோடி என்ற நல்ல தொகைக்கு வாங்கப்பட்டார்.
சமீப வருடங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்காக அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவரை டெல்லி அணி 2025 ஐபிஎல் தொடரில் தங்களுக்காக விளையாடுவதற்கு வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் ஐபிஎல் 2025 தொடரிலிருந்து விலகுவதாக ஹரி ப்ரூக் அறிவித்துள்ளார்.
2 வருடங்கள் தடை:
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹரி ப்ரூக் கூறியுள்ளார். இதற்காக டெல்லி நிர்வாகம் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அடுத்த 2 வருடங்கள் ஹரி ப்ரூக் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகி நேஷனல் டெய்லி பத்திரிக்கையில் உறுதி செய்துள்ளார்.
அதாவது சமீப வருடங்களாகவே இப்படி ஏலத்தில் பங்கேற்று விலைப் போகும் வீரர்கள் கடைசி நேரத்தில் ஏதேனும் காரணங்களைச் சொல்லி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதனால் கடைசி நேரத்தில் சரியான மாற்று வீரர்களை கண்டறிய முடியாதது ஐபிஎல் அணிகளின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே அப்படி பாதையில் விளையாடும் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் கேட்டுக்கொண்டன.
நல்ல தண்டனை:
அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ காயத்தை தவிர்த்து மற்ற காரணத்துக்காக விலகும் வீரர்களுக்கு 2 வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. தற்போது அந்த விதிமுறையை ஹரி ப்ரூக் மீறியதாலேயே 2026, 2027 ஆகிய 2 ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து விளையாடியது.
இதையும் படிங்க: லண்டனில் இந்திய ரசிகர்களின் பவர் தெரியுதா? லார்ட்ஸ் மைதானத்துக்கு 45 கோடி நஷ்டம்.. காரணம் என்ன?
அத்தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தாவில் இரவு நேரத்தில் காற்று சுத்தமாக இல்லாததால் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை தம்மால் தெளிவாக பார்க்க முடியாமல் அவுட்டானதாக ஹரி ப்ரூக் கூறினார். எனவே சென்னையில் நடைபெறும் அடுத்தப் போட்டியில் காற்று சுத்தமாக இருக்கும் என்று நம்புவதாக அவர் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசினார். அதற்கு அப்போதே வருணிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ப்ரூக் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட தடைப் பெற்றுள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் இந்தியாவை அவமதித்ததற்கு நல்ல தண்டனை கிடைத்துள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.



