லண்டனில் இந்திய ரசிகர்களின் பவர் தெரியுதா? லார்ட்ஸ் மைதானத்துக்கு 45 கோடி நஷ்டம்.. காரணம் என்ன?

India Lords
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக செயல்பட்டு வந்தது. வரலாற்றில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் நடைபெற்ற அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

அடுத்ததாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலிய அணியிடம் சொதப்பிய இந்தியா மீண்டும் கோப்பையை கோட்டை விட்டது. அடுத்ததாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பயணத்தில் இந்தியா வலுவாக செயல்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரிலும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

லண்டனில் நஷ்டம்:

அதன் காரணமாக 2025 ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஹாட்ரிக் முறையாக தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது. மறுபுறம் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. இந்நிலையில் அந்தப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெறாததால் போட்டியை நடத்தும் லார்ட்ஸ் மைதானத்திற்கு சுமார் 45 கோடி நஷ்டம் வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது 140 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அணி உலகில் எங்கு விளையாடினாலும் அங்கு இந்தியாவைச் சேர்ந்த ரசிகர்கள் நேரடியாக சென்று மிகப்பெரிய ஆதரவை கொடுப்பது வழக்கமாகும். அதனால் வெளிநாடுகளில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளில் டிக்கெட் விற்பனைக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு எப்படியும் இந்தியா பெற்று விடும் என்ற நம்பிக்கையில் லார்ட்ஸ் மைதான நிர்வாகம் அப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட்டை 90 யூரோ என்ற விலைக்கு நிர்ணயித்தது.

- Advertisement -

இந்தியாவின் பவர்:

ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதன் காரணமாக அப்போட்டியை பார்ப்பதற்கு 90 யூரோ என்ற விலையில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் வரமாட்டார்கள் என லார்ட்ஸ் மைதான நிர்வாகம் கருதுகிறது. அதனால் தற்போது அந்த டிக்கெட்டின் விலை 90 யூரோவிலிருந்து 40 யூரோவாக குறைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் உள்ள தி டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட அக்சர் படேல் – ஆதரவளித்தது யார்?

அதன் அடிப்படையில் ஒரு டிக்கெட்டுக்கு 50 யூரோ அளவுக்கு லார்ட்ஸ் மைதானம் நஷ்டத்தை சந்திக்க உள்ளதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இப்போதாவது எங்கள் அணி மற்றும் எங்களுடைய பவர் தெரிகிறதா? என்று சமூக வலைதளங்களில் பெருமையுடன் பேசுகின்றனர். ஏனெனில் எப்போதும் இந்தியாவுக்கு ஐசிசி சாதகமாக இருப்பதாக அதே இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement