10 வருஷம் 332 நாட்கள் கழித்து ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய பஞ்சாப் வீரர் – அரிதிலும் அரிதான சாதனை

Harpreet-Bhatia
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-ஆவது லீக் ஆட்டம் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த இடதுகை பேட்ஸ்மேனான ஹர்ப்ரீத் பாட்டியா ஐபிஎல் கிரிக்கெட்டில் அரிதிலும் அரிதான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Harpreet Bhatia 2

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் இடம் பிடித்த ஹர்ப்ரீத் பாட்டியா அவர்கள் கடைசியாக ஐபிஎல் தொடரில் 2012-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகள் 332 நாட்கள் எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடாத அவர் நேற்றைய போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம் பிடித்திருந்தார்.

இதன் மூலம் இரண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே அதிக போட்டிகளை தவற விட்டவர் என்ற மோசமான சாதனையை மேத்யூ வேட்டையும் தாண்டி இவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக 2011-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக மேத்யூ வேட் விளையாடியிருந்த வேலையில் அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு தான் குஜராத் அணிக்காக விளையாடினார். இப்படி 10 ஆண்டுகள் 312 நாட்கள் இடைவெளியில் மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் விளையாடிய வேட் அதிக இடைவெளி விட்டு விளையாடிய பிளேயர் என்ற சாதனையில் இருந்தார்.

Harpreet Bhatia 1

இந்நிலையில் அவரது இந்த சாதனையை தற்போது ஹர்ப்ரீத் பாட்டியா முறியடித்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்போட்டோர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய ஹர்ப்ரீத் பாட்டியா ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலகட்டத்தில் கொல்கத்தா அணி மற்றும் புனே அணிகளில் இடம்பெற்று இருந்தாலும் பெரிய அளவில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

இதுவரை நான்கு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே விளையாடி இருந்த இவர் தற்போது ஐந்தாவது போட்டியில் நேற்று விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேஷ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வரும் இவர் முதல்தர கிரிக்கெட்டில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இம்முறை பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : என்னாங்க கேப்டன்ஷிப் இது? முக்கிய வீரரை யூஸ் பண்ணல – தடவல் இன்னிங்ஸ் விளையாடிய ராகுலை விளாசும் ரசிகர்கள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் 40 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு பஞ்சாப் அணியின் நிர்வாகம் அவர்மீது நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement