டெஸ்ட் விளையாடிய அனுபமில்லாத எங்களுக்கு இவரின் அட்வைஸ் ரொம்ப ஹெல்ப்பா இருக்கு – ஹர்மன்ப்ரீட் கவுர்

Harmanpreet-3
- Advertisement -

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றிருக்கும் இந்திய மகளிர் அணியானது ஏழு வருடங்கள் கழித்து முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய மகளிர் அணியானது இந்த டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாடபோகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைவரிடமும் எழுந்துள்ளது.

harmanpreet 2

- Advertisement -

மேலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகளில் மித்தாலி ராஜைத் தவிர்த்து மற்றவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமில்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் இந்திய அணியின் துணைக் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய ஆடவர் அணியின் துணைக் கேப்டனான ரஹானே தங்களுக்கு நிறைய அலோசனைகள் வழங்கியுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறத்து பேசிய அவர்,

இங்கிலாந்தில் வலைப் பயிற்சி மேற்கொண்டபோது எங்களுக்கு அஜிங்கியா ரஹானேவுடன் பேசும் வாய்ப்பு எளிதாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் எப்படி நீண்ட நேரம் பேட்டிங் விளையாடுவது என்பது குறித்த பல ஆலோசனைகளை அவர் எங்களுக்கு அளித்துள்ளார். நாங்கள் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் ரஹானேவின் ஆலோசனைகள் அனைத்தும் எங்களை மனரீதியாத தயார்படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது.

harmanpreet 1

எனவே அவர் கூறிய ஆலோசனைகளை பின்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்திய மகளிருக்கான டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கவிருக்கிறது. இந்திய அணியின் மகளிர் கேப்டனாக விளையாட இருக்கும் மிதாலி ராஜிக்கு 22 ஆண்டுகால கிரிக்கெட்டில் இது வெறும் 11 டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

harmanpreet

இந்த போட்டி முடிந்ததும், அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராகவே மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் பங்கு பெற இருக்கும் இந்திய மகளிர் அணியானது, அடுத்ததாக ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் இந்த ஆண்டு விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement