- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காலம் காலமாக தோல்வி வலியை பாத்த இந்தியா.. இந்த புதிய உணர்வை பார்க்க தயார்.. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டி

ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறுகிறது. மதியம் 3.00 மணிக்கு துவங்கும் அப்போட்டியில் இந்தியா தங்களின் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொளிகிறது. வரலாற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மகளிர் உலகக் கோப்பையை ஒரு முறை கூட வென்றதில்லை.

எனவே இம்முறை மகளிர் கிரிக்கெட்டின் புதிய உலகச் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக இந்திய அணி காலம் காலமாக மகளிர் கிரிக்கெட்டில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதுவரை ஒருமுறை கூட எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்தியா 2005, 2017 உலகக் கோப்பைகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோல்வி வலி தெரியும்:

2017 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா கடைசி நேரத்தில் சொதப்பி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. எனவே அந்த தோல்வி வரலாற்றை இம்முறை மாற்றி 2011 ஆடவர் அணியை போல இந்திய மகளிரணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது. இந்நிலையில் தோல்வி வலி எப்படி இருக்கும் என்பதை பலமுறை இந்திய மகளிரணி பார்த்துள்ளதாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் தெரிவித்துள்ளார்.

இம்முறை அதை மாற்றி வெற்றி உணர்வு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க இந்திய கிரிக்கெட் அணி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோல்வியின் உணர்வு எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இம்முறை நாங்கள் வெற்றி உணர்வு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க உள்ளோம். நாளை எங்களுக்கு சிறந்த நாளாக அமையும் என்று நம்புகிறோம்”

- Advertisement -

வெற்றி உணர்வையும் பாத்துருவோம்:

“அதற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ள நாங்கள் இறுதிப்போட்டிக்கு தேவையான அனைத்தையும் செய்து தயாராக இருக்கிறோம். எப்போதெல்லாம் மகிழ்ச்சியுடன் விளையாடி எங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் பேசியுள்ளோம். இறுதிப் போட்டிக்கு வந்தது எனக்கும், மொத்த அணிக்கும், மொத்த நாட்டுக்கும் மிகவும் பெருமையான தருணமாகும்”

இதையும் படிங்க: நியூஸிலாந்தின் இந்த நன்மைக்காக கிளம்புறேன்.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற கேன் வில்லியம்சன்

“கடந்த 2 போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதித்தற்காக மொத்த நாடும் பெருமையடையும் என்று நம்புகிறேன். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவதை விட பெரிய ஊக்கம் இருக்க முடியாது. அந்தப் போட்டிக்காக எங்களுடைய அணியும் பயிற்சியாளர் குழுவும் ஒன்றாக சேர்ந்து புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம். உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது நீண்ட காலத்திற்கு முன்பே எங்களுக்கு தெரியும். தற்போது அதை வெல்ல 100% ஆட்டத்தைக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -