6, 4, 4, 6, 6.. ஒரே ஓவரில் 28 ரன்ஸ்.. முரட்டு அடி வாங்கிய 150 கி.மீ பாகிஸ்தான் பவுலர்.. மோசமான சாதனை

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து வென்றுள்ளது. அதனால் 3 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரின் கோப்பையை கைப்பற்றியுள்ள நியூசிலாந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் தொடர்ச்சியாக வெற்றி நடை போடுகிறது.

மறுபுறம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடி தலைமையிலும் மாற்றத்தை சந்திக்காத பாகிஸ்தான் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே நழுவ விட்டுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆரம்பத்திலேயே தோற்ற பாகிஸ்தான் ஜனவரி 17ஆம் தேதி டுனிடின் நகரில் நடந்த வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியிலும் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

மோசமான சாதனை:
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து துவக்க வீரர் ஃபின் ஆலன் சதமடித்து 137 (62) ரன்கள் விளாசிய உதவியுடன் 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய பாகிஸ்தானுக்கு நட்சத்திர வீரர் பாபர் அசாம் முடிந்தளவுக்கு போராடி 58 (37) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவரில் 179/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

முன்னதாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியை சந்திப்பதற்கு சாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகிய பவுலர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணிகளை தெறிக்க விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஹரிஷ் ரவூப் 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியிடம் அடி வாங்கியதை போல 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவிடம் அடி வாங்கினார்.

- Advertisement -

அந்த வகையில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அவர் இந்த போட்டியில் 6வது ஓவரை வீசினார். அதில் ஃபின் ஆலன் 6, 4, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்க விட்டதால் பதறிய ரவூப் 4வது பந்தில் ஒய்ட் போட்டார். அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் விளாசிய ஆலன் 5வது பந்திலும் சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் சிங்கிள் எடுத்தார்.

இதையும் படிங்க: வெறும் 5 ஃபோர்ஸ் 16 முரட்டு சிக்ஸ்.. ஆலன் உலக சாதனை.. கேரக்டர் மாறாத பாகிஸ்தானை பொளந்த நியூசிலாந்து

அப்படி ஒரே ஓவரில் (6, 4, 4, ஒய்ட், 6, 6, 1) 28 ரன்களை கொடுத்த ஹரிஷ் ரவூப் தன்னுடைய அடுத்த ஓவரிலும் 23 ரன்கள் கொடுத்தார். அந்த வகையில் இப்போட்டியில் மொத்தம் 2 விக்கெட்டை எடுத்த அவர் அதற்கு நிகராக 4 ஓவரில் 60 ரன்களை 15.00 என்ற மோசமான எக்கனாமியில் வழங்கினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் கொடுத்து மோசமான பந்து வீச்சை (60/2) பதிவு செய்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2018இல் பாஹீம் அஸ்ரப் நியூசிலாந்துக்கு எதிராக 55/1 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement