சூரியகுமார் யாதவுக்கு எதிராக பாக் வீரர் ஹாரிஸ் ரவுப் நிகழ்த்திய தனித்துவமான சாதனை – விவரம் இதோ

Haris Rauf and SKY
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டமானது நேற்று துபாய் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.

சூரியகுமார் யாதவுக்கு எதிராக ஹாரிஸ் ரவுப் சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு அதிரடியாக விளையாடி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இதன் காரணமாக சூப்பர் போர் சுற்றிலும் இந்திய அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுப் மாபெரும் சாதனை டி20 போட்டிகளில் அவருக்கு எதிராக நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறிய போது மூன்றாவது வீரராக சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்தார். அப்போது 11-ஆவது ஓவரை வீசிய அவர் தனது மூன்றாவது பந்தில் சூரியகுமார் யாதவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவை அவர் மூன்றாவது முறையாக ஆட்டமிழக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க : சூர்யகுமாரை தாண்டியது மட்டுமின்றி உலகளவில் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா

ஒட்டுமொத்தமாகவே டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவுக்கு எதிராக 10 பந்துகளை வீசியுள்ள ஹாரிஸ் ரவுப் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முறை ஆட்டமிழக்க வைத்துள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவை அதிகமுறை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement