சூர்யகுமாரை தாண்டியது மட்டுமின்றி உலகளவில் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா

Abhishek and SKY
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

அபிஷேக் சர்மா நிகழ்த்திய உலக சாதனை :

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 39 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் அடித்த 5 சிக்ஸர்களின் மூலம் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை மிஞ்சி உலகளவில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 50 சிக்சர்களை குறைந்த பந்துகளில் அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரரான எவின் லீவிஸ் தன்வசம் வைத்திருந்தார். அதன்படி எவின் லீவிஸ் 366 பந்துகளில் 50 சிக்ஸர்களை அடித்திருந்தார். இந்நிலையில் அந்த சாதனையை முறியடித்த இந்திய வீரர் அபிஷேக் சர்மா 331 பந்துகளில் 50 சிக்ஸர்களை அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தெ.ஆ அணியின் நட்சத்திர வீரர் குவிண்டன் டி காக் – என்ன நடந்தது?

முன்னதாக இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் 510 பந்துகளில் 50 சிக்ஸர்களை அடித்திருந்த வேளையில் அவரைவிட கிட்டத்தட்ட 180 பந்துகளுக்கு குறைவாகவே 50 சிக்ஸர்களை விளாசி அவரை முந்தி அபிஷேக் சர்மா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement