என்னை பொறுத்தவரை நீங்கதான் தொடர் நாயகன் – உருக்கமான பதிவை பதிவிட்ட ஹர்டிக் பாண்டியா

Nattu
- Advertisement -

நேற்று நடைபெற்று முடிந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் குவிக்க இரண்டாவதாக விளையாடிய இந்திய அணி 174 ரன்கள் குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கேப்டன் கோலி இறுதிவரை போராடி 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

INDvsAUS

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்டிக் பண்டியா தேர்வானார். பின்னர் போட்டிக்கு பிறகு பரிசளிப்பு விழாவின் போது நடராஜன் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் ஹர்திக் பாண்டியா.

அவரை பாராட்டி பேசியது மட்டுமின்றி தான் வாங்கிய தொடர் நாயகன் விருதை அவர் கையில் கொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த 29 வயதான வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது மூலம் இந்திய அணியில் இடம் பெற்று தற்போது 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இனி வரும் தொடர்களில் அவர் பெயர் இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து நடராஜன் உடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாண்டியா குறிப்பிட்டதாவது : நடராஜன் இந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளத்தில் முதல் தொடரிலேயே உங்களது கடின உழைப்பையும், திறமையையும் நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

pandya

“என்னை பொருத்தவரை நீங்கள்தான் தொடர் நாயகன்” அண்ணா என்று பதிவிட்டு அவருடன் கிடைத்த இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கடைசியாக நடைபெற்ற 2வது டி20 போட்டி என்பது கூட ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்டிக் பண்டியா இந்த விருது என்னைவிட நடராஜனுக்கு சரியானதாக இருக்கும் என ஏற்கனவே பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement