கங்குலி பர்ஸ்ட் சொன்னாரு. இப்போ இவங்களும் சொல்லிட்டாங்களே – ஹார்டிக் பாண்டியாவின் நிலை அவ்வளவுதானா ?

Pandya-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க்கேற்றார். அதற்கு அடுத்து செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

Pandya

- Advertisement -

ஆனால் அவருக்கு முதுகுவலி அதிகரித்ததை தொடர்ந்து லண்டன் சென்று முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு கடந்த 5 மாதங்களாக எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். மேலும் சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் உடல் தகுதிக்காக பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரின் உடற்தகுதி சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது என்று கருதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாக நியூசிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்ற காரணத்தினால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. அதேபோன்று தற்போதைய உடற்தகுதி தேர்விலும் அவர் தேர்ச்சி பெறவில்லை.

pandya 2

எனவே டெஸ்ட் தொடரிலும் ஹார்டிக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்காக ஹார்டிக் பாண்டியா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஹர்டிக் பண்டியாவின் உடற்தகுதி பரிசோதனை தற்போதும் நடைபெற்றது. ஆனால் அதிலும் அவர் தோல்வியடைந்தார் என்பதனால் இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement