காயமடைந்த ஹார்திக் பாண்டியா அடுத்த போட்டியில் ஆடுவாரா ? – வெளியான தகவல் இதோ

Pandya
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரானது கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் காரணமாக தோல்வியைத் தழுவியது.

pak

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா இரண்டாவது இன்னிங்ஸ்-ஸில் பீல்டிங் செய்ய வரவில்லை.

அவருக்கு பதிலாக இஷான் கிஷன் பீல்டிங் செய்ததால் பாண்டியாவின் உடல் தகுதி குறித்த கேள்வி எழுந்தது. மேலும் இந்த போட்டியில் பந்து வீசாத பாண்டியா பேட்டிங்கிலும் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா அந்த போட்டி முடியும் முன்னரே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ததாக சில தகவல்கள் வெளியாகின.

pandya

இதன் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா ? என்ற கேள்வி பெருமளவு இருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது பாண்டியாவின் உடல் தகுதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் நிச்சயம் பாண்டியா விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் – இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

அவர் காயமடைந்த இருந்தாலும் தற்போது அவரது உடல் தகுதியில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் அவர் நன்றாக இருப்பதால் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement