கடவுள் கருணை காட்டிட்டார். இந்த ஆண்டு என்னோட இலக்கே இது ஒன்னு மட்டும் தான் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலக கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி 10 நாட்களுக்கு முன்னதாகவே ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியானது நேரடியாக சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளதால் வரும் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து இன்னும் ஒரு பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் தனது இலக்கு என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுன்டரான ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை பி.சி.சி.ஐ பக்கத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Hardik Pandya

இது குறித்து அவர் கூறுகையில் : கடவுள் என் மீது கருணை காட்டியுள்ளார். எனது உடற்பகுதி தற்போது முன்பை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே என்னால் எனது பயிற்சியாளர் உடன் நீண்ட நேரம் பீல்டிங்கில் செலவிட முடிகிறது. நான் எப்போதும் ஒரு இயல்பாக இயல்பான ஃபீல்டராகவே இருந்தேன்.

- Advertisement -

ஆனால் நான் தற்போது அதற்கு விதிவிலக்காக இருக்க விரும்புகிறேன். எனது திறமைக்காக சிறிது நேரம் ஒதுக்கி கடினமான கேட்ச்களையும் பிடிக்க முயற்சி செய்து வருகிறேன். டைவ் செய்து பந்துகளை நிறுத்துவது எனக்கு பிடிக்கும்.

இதையும் படிங்க : வாழ்த்திய கங்குலி, அந்த 2 விஷயத்தையும் உடனடியாக மாற்றுவேன் – புதிய தலைவர் ரோஜர் பின்னி உறுதி

அதே போன்று இந்த ஆண்டு எனது ஒரு குறிக்கோள் யாதெனில் இந்த தொடரில் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக நான் பிடிக்கும் கேட்ச் இருக்க வேண்டும். பந்தை கேட்ச் பிடித்து சிறப்பான கேட்சை பிடித்த வீரராக நான் திகழ வேண்டும் என பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பாண்டியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement