ஹார்டிக் பாண்டியாவின் இடத்திற்கு வந்த ஆபத்து – இனி அவர் டெஸ்ட் டீமுக்கு திரும்ப வாய்ப்பில்ல

Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 63 ஒருநாள் போட்டிகள், 49 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஏற்கனவே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா தற்போது பந்து வீசாமல் வெறும் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியில் அவரது இடம் சிக்கலானது.

Pandya-3

- Advertisement -

இந்நிலையில் தற்போது மெல்ல மெல்ல பந்து வீசி வரும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டியிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் அவர் இன்னும் இடம்பெறவில்லை. மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் பந்துவீசி ஆக வேண்டுமென இந்திய நிர்வாகம் உறுதியான முடிவில் உள்ளது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது சந்தேகமாகி உள்ளது.

ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடுவதால் அவர் ஆல்-ரவுண்டராக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. அதே வேளையில் வெளிநாட்டு மைதானங்களில் நிச்சயம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்கிற காரணத்தினால் ஹார்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் நீடிப்பார் என்று கூறப்பட்டது.

Pandya

ஆனால் தற்போது பந்துவீச கஷ்டப்பட்டு வரும் பாண்டியா மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்ப முடியாது என்றும் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை இந்திய அணி தேடி வந்தது. அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது அரை சதம் அடித்து அசத்திய ஷர்துல் தாகூரை நிச்சயம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக மாற்ற இந்திய அணி பரிசோதித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷர்துல் தாகூர் தற்போது பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த அவர் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

thakur 1

இதன் காரணமாக இனிவரும் போட்டிகளிலும் ஷர்துல் தாகூர் இடம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் எட்டாவது வீரராக களமிறங்கிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எனவே இனி டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூர் விளையாடுவது உறுதியாகி உள்ளதால் ஹர்திக் பாண்டியாவின் இடம் டெஸ்ட் அணியில் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement