இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது ஆட்டத்தைப் போன்றே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த வேளையில் மீண்டும் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் பேட்டிங் அசத்தலாக இருந்தது. பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் பினிஷாராக களமிறங்கும் ஹார்டிக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு ரன்களை குவிக்காத போது நேற்றைய போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
அதன்படி நேற்றைய போட்டியில் 52 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் என 70 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய ஹார்டிக் பாண்டியா தனது பேட்டிங்கிற்கு விராட் கோலி ஆலோசனையை உதவியது என்று சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னை பேட்டி செய்ய களமிறங்கும் போது போதிய வரை நீங்கள் களத்தில் நின்று பேட்டிங் செய்ய வேண்டும் 50 ஓவர் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் களத்தில் இருந்தால் தான் நமக்கு பேட்டிங் ரிதம் கிடைக்கும்.அதன் பின்னர் நன்றாக அடிக்கலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க : IND vs WI : கம்பேக்னா இப்டி இருக்கணும் – ராபின் சிங் 27 வருட தனித்துவ சாதனையை தூளாக்கி – புதிய வரலாறு எழுதிய ஜெய்தேவ் உனட்கட்
அந்த வகையில் அவரது அட்வைஸை பின்பற்றியே நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலிக்கு ஹார்டிக் பாண்டியா நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.