IND vs SL : இலங்கை அணிக்கெதிரான வெற்றி குறித்து ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன? – விவரம் இதோ

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது.

IND vs SL

- Advertisement -

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதிநேரத்தில் கேப்டன் ஷனகா, ஹசரங்கா மற்றும் கருணரத்னே ஆகியோரது அதிரடி காரணமாக கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்று 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியின் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை குவித்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : எனக்கு ஏற்பட்டது வெறும் தசை பிடிப்பு மட்டும்தான். பயப்படும் அளவிற்கு எதுவும் எல்லை நான் நலமாகத்தான் இருக்கிறேன்.

Shivam Mavi

சரியான தூக்கமும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததுமே இந்த தசைப்பிடிப்புக்கு காரணம். இந்த போட்டியில் இளம் வீரர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஷிவம் மாவியிடம் நான் கூறியதெல்லாம் ஒரு விடயம் தான். ஐ.பி.எல் தொடரில் நீ சிறப்பாக பந்துவீசியிருக்க, உன்னோட திறமை என்னனு எனக்கு தெரியும். நீ உன்னோட இயல்பான பவுலிங்க போடு அதுவே போதும்.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் உன்னுடைய பந்துகளை அடித்தால் நீ கவலைப்பட வேண்டாம். உன்னுடைய பந்துவீச்சில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் இதுபோன்ற சூழ்நிலை அனைவருக்குமே வரும். எனவே பந்து வீசுவதில் மட்டும் கவனம் இருக்கவேண்டும் என்று கூறினேன். அதேபோன்று தற்போது நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் பந்துவீசி வருகிறேன்.

இதையும் படிங்க : IND vs SL : முதலாவது டி20 போட்டியில் ஏன் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை – கேப்டன் பாண்டியா விளக்கம்

மேலும் நான் எனது ஸ்விங் பந்துவீச்சில் அதிக பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த போட்டியில் கூட என்னிடம் இருந்து இன்ஸ்விங் பந்துகளை நீங்கள் பார்த்திருக்கலாம். வலைப்பயிற்சியில் நான் பந்துவீசுவதை போன்ற துவக்க இவர்களில் புது பந்தில் மகிழ்ச்சியுடன் வீசி வருகிறேன் என்று ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement