இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக தீபக் ஹூடா 41 ரன்களையும், இஷான் கிஷன் 37 ரன்களையும், அக்சர் படேல் 31 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலும் இறுதியில் தசுன் ஷனகா, ஹசரங்கா, கருணரத்னே ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதிவரை போராடிய இலங்கை அணியானது 20 ஓவர்களில் முடிவில் 160 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் விளையாடாதது ஏன் என்கிற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.
Note – Arshdeep Singh wasn’t available for selection for the 1st T20I against Sri Lanka since he has still not fully recovered from his illness.#INDvSL
— BCCI (@BCCI) January 3, 2023
அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் பார்க்கப்பட்டு வருகிறார். பவர்பிளே ஓவர்களில் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றும் அவர் இறுதிக்கட்ட டெத் ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கச்சிதமாக பந்துவீசி வருவதால் டி20 இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான முதல் போட்டியில் அவர் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா டாஸின் போதே விளக்கம் அளித்தார். அதன்படி பாண்டியா கூறுகையில் : இலங்கை அணிக்கெதிரான இந்த முதல் போட்டியில் விளையாடும் அளவிற்கு அர்ஷ்தீப் சிங் இன்னும் முழுஉடற்தகுதி பெறவில்லை அதனாலே அவர் இந்த போட்டியை தவறவிட்டுள்ளார். அடுத்த போட்டியில் அவர் இடம்பெறுவார் என்றும் பாண்டியா நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க : வீடியோ : வெறித்தமான ஓடி ரன் அவுட்டான பாபர் அசாம் – பாகிஸ்தானின் 2வது இன்சமாமாக பரிதாப சாதனை
மேலும் அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமும் தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அதில் : அர்ஷ்தீப் முதல் போட்டிக்கான அணித்தேர்வில் இடம்பெறவில்லை. அவர் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் இந்த போட்டியில் இடம்பெறவில்லை என்று அதிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.