- Advertisement -
ஐ.பி.எல்

GT vs RR : அவங்க 2 பேருக்கும் எந்த அட்வைஸ்சும் தரமாட்டேன். அவங்களே பாத்துப்பாங்க – வெற்றிக்கு பிறகு பாண்டியா பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் 30 ரன்கள் குவித்தார். குஜராத் அணி சார்பாக பந்துவீச்சில் ரஷித் கான் மூன்று விக்கெட்டுகளையும், நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்கிரர் விரிதிமான் சாஹா 41 ரன்களுடனும், ஹார்டிக் பாண்டியா 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதோடு துவக்க வீரர் சுப்மன் கில்லும் 36 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : நூர் அகமதிடம் நான் எந்த ஒரு அட்வைஸும் கூறுவதில்லை. அவரை ரஷீத் கானிடமே விட்டுவிடுவேன். ராஷித் கான் அவரை மிகச் சிறப்பாக கையாளுகிறார். அவர்கள் இரண்டு பேருக்குமே நான் எந்த ஒரு கருத்தினையும் வழங்குவதில்லை. ஸ்லிப் நிற்கவைப்பது, பீல்டிங்கில் எந்தெந்த மாற்றம் என்று மட்டுமே கேட்பேன்.

- Advertisement -

ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே கம்யூனிகேட் செய்து மிகச் சிறப்பாக பந்து வீசுகின்றனர். நூர் அகமதுவை கையாளுவதற்கு ரஷித் கானை விட சிறந்தவர் யாருமில்லை. ஒருவேளை நாங்கள் நினைத்தபடி போட்டி செல்லவில்லை என்றால் மட்டுமே நான் அவர்கள் இருவரிடமும் பேசுவேன். மற்றபடி அவர்களே போட்டியை பார்த்துக் கொள்வார்கள். விரிதிமான் சாஹா மிகச் சிறந்த விக்கெட் கீப்பர். ரஷீத் கான், நூர் அகமது போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திசைகளிலும், வெவ்வேறு வேகத்திலும் பந்து வீசுபவர்கள். அவர்கள் வீசும் பந்தினை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அதனை பிடிப்பது என்பது எளிதல்ல.

இதையும் படிங்க : IPL 2023 : இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கப்போவது இவங்கதான் – ரவி சாஸ்திரி கணிப்பு

ஒரு கேப்டனாக கடந்த போட்டியில் நான் சில தவறுகளை செய்து விட்டேன். அதனை இம்முறை திருத்தியுள்ளேன். குற்றங்களை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும், கூச்சமும் இல்லை. அதுதான் என் வெற்றியின் ரகசியமாகவும் பார்க்கிறேன் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by