GT vs PBKS : ஜெயிச்சாலும் இந்த விஷயத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன். குஜராத் வீரர்களை கடிந்த – ஹார்டிக் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குஜராத் அணி இந்த ஆண்டும் தொடர்ச்சியாக தங்களது வெற்றி நடையை தொடர்ந்து வருகிறது. ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறையிலும் பலமாக இருப்பதினால் நடப்பு பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் அவர்களது ஆதிக்கவே மேலோங்கி இருக்கிறது.

GT vs PBKS

- Advertisement -

அதன்படி தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டிகள் அனைத்திலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் அணியானது நேற்று நடைபெற்ற 18 ஆவது லீக் போட்டியிலும் மேலும் ஒரு வெற்றி பதிவு செய்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 154 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tewatia

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த வெற்றியை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். ஏனெனில் இந்த போட்டி முன்கூட்டியே முடிவடைந்து இருக்க வேண்டும். இது போன்ற போட்டிகளில் இருந்து நிச்சயம் எங்கள் அணியின் வீரர்கள் பாடத்தை கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டி கடைசி வரை செல்லக்கூடிய போட்டி கிடையாது. எப்பொழுதுமே ஒரு போட்டி முற்றிலுமாக முடிந்தால் தான் அது வெற்றி என்ற கணக்கு. இந்த போட்டியில் நாங்கள் இறுதி ஓவர் வரை நிச்சயம் சென்று இருக்கக் கூடாது.

இதையும் படிங்க : வீடியோ : மீண்டும் பஞ்சாப் வெற்றியை நொறுக்கிய திவாடியா – ஃபினிஷிங் செய்வதில் தோனி, டிகே’வை மிஞ்சிய சாதனை

இருந்தாலும் இது போன்ற போட்டிகளில் இருந்து தான் நமது வீரர்கள் பல விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக முகமது ஷமி, அல்சாரி ஜோசப் மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசினர் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement