கோப்பையை கையில் ஏந்திய பின்னர் குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா – பேசியது என்ன?

Pandya
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவி க்க 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நிர்ணயிக்கப்பட்டது.

GTvsRR

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்த இலக்கினை துரத்தி விளையாடிய குஜராத் அணியானது 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அவர்கள் அறிமுக சீசனிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி முன்னேறியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது அதனை தொடர்ந்து மீண்டும் இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

GT vs RR Shubman Gill

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டி ஒரு சிறப்பான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் எப்படி வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் அணியை சுற்றி நல்ல சூழ்நிலை நிலவியது.

- Advertisement -

நானும், ஆசிஷ் நெக்ராவும் ப்ராப்பர் பவுர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று நினைத்தோம். மேலும் பேட்ஸ்மேன்களும் அவ்வப்போது சரியான பங்களிப்பை வழங்கியதனால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதிக முறை பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மூலம் தான் வெற்றி கிடைக்கும். அதே வேளையில் பவுலர்களும் சில போட்டிகளில் வெற்றி பெற்று கொடுப்பார்கள். எங்கள் அணியில் இரண்டுமே சிறப்பாக அமைந்திருந்தது.

இதையும் படிங்க : தோற்றாலும் இந்த விடயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் உருக்கம்

இந்த கோப்பையுடன் சேர்த்து நான் 5 முறை பைனலில் வெற்றி பெற்று இருக்கிறேன் இது மிகச் சிறப்பான ஒன்று. இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும். கேப்டனாக முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மகிழ்ச்சியை என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement