- Advertisement -
ஐ.பி.எல்

எதாவது செய்ஞ்சி கண்டிப்பா கம்பேக் கொடுப்போம்.. பிளே ஆப் வாய்ப்பு குறித்து – ஹார்டிக் பாண்டியா பேச்சு

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி சொதப்பி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவர் பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதுவரை இந்த சீசனில் 8 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள மும்பை அணி 6 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9 ஆவது இருக்கிறது.

மும்பை அணியின் கம்பேக் குறித்து : ஹார்டிக் பாண்டியா பேச்சு

கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 240 ரன்கள் அடித்தும் மும்பை அணி தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இனிவரும் 6 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் வாய்ப்பை கற்பனை செய்து பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் தங்களது கம்பேக் வலுவாக இருக்கும் என்று அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா சில நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : இந்த சீசன் முழுவதும் நாங்கள் பீல்டிங்கில் கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளோம். அவற்றை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே போட்டியில் அதிர்ஷ்டம் நமக்கு கை கொடுக்கும்.

எங்களது அணியின் வீரர்கள் என்னதான் போராடினாலும் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்த வருகிறது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மாற்றங்களை செய்ய அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால் இருக்கும் பவுலர்களை வைத்து என்னென்ன மாற்றங்களை செய்தால் நான்றாக இருக்கும் என்பதை ஆராய்ந்து செயல்பட காத்திருக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய மண்ணில் முதல் பவுலராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்

ஒட்டுமொத்தமாக எங்களது அணியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இருப்பினும் எங்களின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாக இருக்கும் பயிற்சி ஊழியர்கள் ஆகியோர் எங்கள் பக்கம் இருப்பதால் நிச்சயம் எதாவது ஒரு வழிமுறையை கண்டறிந்து பலமாக இந்த தொடருக்குள் வருவோம் என ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -