இந்திய மண்ணில் முதல் பவுலராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்

Bhuvneshwar Kumar
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது லீக் போட்டியில் விளையாடியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 155 ரன்களை மட்டுமே குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தோல்வி ஆர்.சி.பி அணி இந்த தொடரில் பெற்ற 3 ஆவது தோல்வியாக அமைந்தது. இருப்பினும் 6 வெற்றிகளுடன் ஆர்.சி.பி அணி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

முதல் பந்துவீச்சாளராக மாபெரும் சாதனை நிகழ்த்திய புவனேஷ்வர் குமார் :

இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 3 விக்கெட்டுகளின் மூலம் முதல் பவுலராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் புவனேஷ்வர் குமார் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் அவர் குஜராத் அணியின் துவக்க வீரராகளான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய மண்ணில் மட்டும் தனது 200 ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார். இப்படி ஒரு பந்துவீச்சாளர் இந்திய மண்ணில் மட்டும் 200 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை.

இந்திய மண்ணில் மட்டும் இதுவரை 184 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்று எடுத்த 3 விக்கெட்டையும் சேர்த்து இதுவரை 201 ஐ.பி.எல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து யுஸ்வேந்திர சாஹல் 154 போட்டிகளில் விளையாடி 186 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதற்கடுத்து சுனில் நரேன், பியூஷ் சாவ்லா மற்றும் அஷ்வின் ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : புவனேஷ்வர் குமாருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தா அதில் எந்த தப்பும் இல்ல – வீரேந்திர சேவாக் கோரிக்கை

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த வேளையில் இந்த 2026 ஆண்டும் இதுவரை நடைபெற்று போட்டிகளின் முடிவில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement