கடந்து போன எதையும் நம்மால் மாற்ற முடியாது. இந்த தொடரை யூஸ் பண்ணிக்கோங்க – ஹார்டிக் பாண்டியா கருத்து

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நடந்த 18-ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக போட்டி ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது மவுன்ட் மாங்கனியில் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த டி20 தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நியூசிலாந்து கிரிக்கெட் விளையாட சரியான இடம். ஆனால் முதல் போட்டியை நாங்கள் மழையின் காரணமாக தவற விட்டு விட்டோம். எனவே இனிவரும் போட்டிகளில் விளையாட ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எங்களது அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களாக இருக்கலாம்.

David Miller Hardik Pandya IND vs SA

ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் குறைவானவர்களே கிடையாது. ஏனெனில் அணியில் உள்ள பலரும் ஐபிஎல் தொடர்களில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதோடு சர்வதேச போட்டிகளிலும் சிலர் விளையாடி உள்ளனர். இப்படி அனைவருமே அணியில் உள்ளதால் இந்த தொடரை நாங்கள் நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு விளையாட நினைக்கிறோம்.

- Advertisement -

அதேபோன்று நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது அனைவருக்குமே வருத்தம் தான். ஆனால் உலகக்கோப்பை முடிந்து விட்டது அதனை நாம் கடந்து வந்து விட்டோம். மீண்டும் சென்று நடந்த எந்த ஒரு விடயத்தையும் நம்மால் மாற்ற முடியாது. எனவே இந்த உலககோப்பை தோல்வியை மறந்து விட்டு அடுத்ததாக இந்த தொடரை சரியாக பயன்படுத்தி நாம் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : உங்கள விட எங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. அதற்கு என்ன பண்றது – அஷ்வின் பகிர்ந்த வேதனை

இனிவரும் தொடர்களில் அணியை வலுவாக கட்டமைத்து அடுத்த உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement