இந்த மைதானத்தை சுத்தி பாக்கவே ஒருமணி நேரம் ஆகுது – மோதிரா மைதானம் குறித்து வியந்த இந்திய வீரர்

Pandya

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடறில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முக்கியமான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று தற்போது சாதனை படைத்துள்ள குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள “மோதிரா” மைதானத்தில் நடைபெற உள்ளது.

motera

3வது டெஸ்ட் போட்டி 24ஆம் தேதியும், 4வது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இந்நிலையில் இன்று மைதானத்திற்குள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மைதான நிர்வாகம் அரசாங்க விதிமுறைப்படி கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. இந்த மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரசிங் ரூம், 11 சென்டர் பிட்சுகள் மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் என பல அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த உலகிலேயே மிகப் பெரிய மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு 55 ஆயிரம் பேர் பார்வையாளராக அனுமதிக்கப்பட உள்ளனர்.

Motera-1

அதற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் இந்த பிரம்மாண்ட மைதானத்தை கண்ட இந்திய ரசிகர்கள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஆகியோர் இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மைதானத்திலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பகிர்ந்த ஹர்டிக் பண்டியா :

- Advertisement -

pandya

இந்த மைதானம் குறித்தும் சில கருத்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் விளையாட இருப்பது மிக பெருமையாக இருக்கிறது. இந்த மைதானத்தில் எல்லாமே அற்புதமாக இருக்கிறது. என்னை கேட்டால் இந்த மைதானத்தை சுற்றி பார்க்கவே ஒரு மணி நேரம் ஆனது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.