- Advertisement -
ஐ.பி.எல்

ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பேட்டிங் காரணம் இல்ல.. தப்பு இங்கதான் நடந்தது – பாண்டியா பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டியானது நேற்று கௌகாத்தி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக இந்த ஆட்டமானது 11 ஓவார்களாக குறைத்து வைக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : பாண்டியா பேட்டி

அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களையும், வைபவ் சூர்யவன்சி 39 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் :

இந்த போட்டியின் போது ஆரம்பத்தில் நாங்கள் பந்துவீச நினைத்த இடத்தில் எங்களால் சரியாக பந்துவீச முடியவில்லை. அதனால் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடிவிட்டனர். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் அதிக பொறுப்பை எடுத்து சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இல்லை. பேட்டிங்கை பொறுத்த வரை நான் எந்த ஒரு தவறையும் கூற மாட்டேன். ஏனெனில் இதுபோன்ற குறைந்த ஓவர் போட்டிகளில் பவுலர்கள் தான் பொறுப்பு எடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவை வெளிய அனுப்பியதால் தான் சி.எஸ்.கே அணி இந்த நிலைமையில் இருக்கு – மைக்கல் வாகன் சாடல்

டி20 போட்டிகளில் இரண்டு சரியான பந்துகளை நாம் வீசியிருந்தால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும். அதேபோன்று இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். ஐந்து நல்ல பந்துகளை வீசியிருந்தால் 5 சிக்ஸர்கள் குறைவாக இருந்திக்கும். அப்படி சரியாக பந்துவீசாததால் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளோம் என ஹார்டிக் பாண்டியா தோல்வி குறித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -