பவுலர்ஸ் மேல தப்பே இல்ல.. இங்க இப்படித்தான் நடக்கும்.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பேட்டி

Hardik Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆர்.சி.பி அணியிடம் நாங்க தோற்க பவுலர்ஸ் காரணம் இல்ல : ஹார்டிக் பாண்டியா

அதே வேளையில் தங்களது ஐந்தாவது போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் இறுதியில் அவர்களால் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டி ரன் விருந்தாக அமைந்தது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகச் சிறப்பாக இருந்தது. கடைசி கட்டத்தில் இரண்டு சிக்சர்கள் மட்டும் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று போட்டி முடிந்தும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்துவது கடினம்.

- Advertisement -

மேலும் பேட்ஸ்மேன்களை தடுத்து நிறுத்துவதும் கடினம் எனவே பவுலர்கள் மீது குறை கூற எதுவும் இல்லை. இந்த தோல்வி குறித்து நிறைய யோசிக்காமல் அடிப்படை விடயங்களை பலப்படுத்தினால் முடிவு எங்களுக்கு சாதகமாக வரும் என்று நினைக்கிறன். நமன் தீர் எப்போதுமே பின்வரிசையில் தான் விளையாடுகிறார். ஆனால் கடைசியாக நடைபெற்ற போட்டியில் ரோகித் இடம்பெறாததால் அவர் முன்கூட்டியே களமிறங்க நேர்ந்தது.

இதையும் படிங்க : 10 வருஷமா இங்க ஆடுறேன்.. இதுகூட தெரியாதா? மும்பை அணியை வீழ்த்திய பின்னர் – க்ருனால் பாண்டியா பேட்டி

தற்போது ரோகித் மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால் நமன் தீர் பின் வரிசைக்கு சென்றுள்ளார். திலக் வர்மா கடைசியாக விளையாடிய போட்டியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் அந்த நாள் அவருடைய நாளாக அமையவில்லை. ஆனால் இன்று அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் வெற்றிக்காக இறுதிவரை போராடி தவற விட்டது வருத்தம் தான் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement