இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
லக்னோ அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : ஹார்டிக் பாண்டியா கூறியது என்ன?
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. லக்னோ அணியின் சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 60 ரன்களையும், மார்க்கம் 53 ரன்களையும் குவித்தனர். பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :
லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளித்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 67 ரன்களையும், நமன் திர் 46 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வி வருத்தம் அளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை பீல்டிங்கின் போது அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். என்னுடைய பந்துவீச்சை நான் எப்பொழுதும் ரசித்து வருகிறேன். நான் இந்த மைதானத்தின் தன்மையை கணித்ததால் என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது. நான் இந்த போட்டியில் விக்கெட் எடுக்க ஆசைப்பட்டு பந்து வீசவில்லை.
டாட் பால்களை அதிகமாக வீசினால் பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து ஆட்டமிழப்பார்கள் என்று நினைத்தே பந்து வீசினேன். அந்த வகையிலே எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கை பொறுத்த வரை நாங்கள் இறுதி கட்டத்தை நோக்கி சென்றே வீழ்ந்துள்ளோம். இந்த தோல்விக்கு நான் யாரையும் குறிப்பிட்டு காரணம் கூற விரும்பவில்லை. ஏனெனில் வெற்றி பெறும்போது ஒரு அணியாக வெற்றி பெறுகிறோம்.
இதையும் படிங்க : 12 ரன்ஸ்.. 6க்கு 1.. இம்பேக்ட் வீரராக திணறிய திலக் வர்மா அரிதான பரிதாப சாதனை.. மும்பையை சாய்த்த லக்னோ
அதேபோன்று தோல்வியை சந்திக்கும் போதும் ஒரு அணியாகவே தோல்வியை சந்திக்கிறோம். அனைவருக்குமே இந்த தோல்வியில் பங்கு உண்டு. போட்டியின் சிறு சிறு இடத்தில் ஏற்படும் விடயங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த ஒரு நல்ல உதாரணம். பேட்டிங்கில் இன்னும் சற்று உத்வேகத்தை காட்டியிருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



