ஒரே காபி தான் குடிச்சேன். அதுக்கு இவ்ளோ பெரிய பிரச்சனையா ? – நினைவுகூர்ந்த பாண்டியா

Pandya
- Advertisement -

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கி உள்ளனர். மேலும் தங்களது இந்த ஓய்வு நேரத்தில் வீட்டில் வெறுமனே நேரத்தை கழிக்காமல் அதனை பயனுள்ள வகையாக இன்ஸ்டாகிராமில் பேட்டியின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கும், சக வீரர்களிடம் நேர்காணலும் என ஈடுபட்டு பொழுதை கழித்து வருகின்றனர்.

pandya 2

- Advertisement -

இந்த வகையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா மற்றும் க்ருனால் பாண்டியன் ஆகியோர் இணைந்து உரையாடினார். அந்த உரையாடலில் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் ஐபிஎல் வரை பல விஷயங்களை மூவரும் பகிர்ந்துகொண்டனர்.

அந்தவகையில் ஹர்திக் பாண்டியா இந்த நேரங்களில் தான் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றியும் கருத்தினை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில : ஒரே ஒரு காபி தான் குடித்தேன் ஆனால் அது எனக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. இப்போது வரை விற்கப்பட்ட அனைத்து காபி கணக்கிட்டால் கூட என்னுடைய காபியின் விலை அதிகமானது என்று கிண்டலாக ஹார்டிக் பாண்டியா கூறினார்.

Pandya 1

அவர் கூறியதற்கு காரணம் யாதெனில் : அந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட மூலம் இந்திய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் இந்திய அணியில் இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலம் என்பதினால் அவர் அதை விலையுயர்ந்த நேரம் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த இடைக்கால தடை பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா தற்போதைய இந்தியாவின் முக்கிய வீரராக வளர்ந்து நிற்கிறார். மேலும் கடந்த சில தொடர்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹர்டிக் பண்டியா உள்ளூர் தொடரில் மீண்டும் விளையாடி தற்போது ஐபிஎல்லில் அதிரடிக்கு தயாரான வேளையில் ஐபிஎல் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pandya

மேலும் இந்த காபி வித் கரன் பிசோடில் பெண்கள் குறித்து தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement