கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதால் வருடா வருடம் இந்த தொடரானது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 18-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
இம்பேக்ட் ரூல்ஸ்ஸால் அவங்களுக்கு தான் பாதிப்பு : ஹார்டிக் பாண்டியா
இந்த ஐபிஎல் தொடரை சுவாரஸ்யப்படுத்துவதற்காக ஐபிஎல் நிர்வாகமானது பல்வேறு விதிமுறைகளை அவ்வப்போது நடைமுறைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த விதிமுறையானது 2027-ஆம் ஆண்டு வரை இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக தற்போது வரை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நடைமுறையில் தான் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை மூலமாக போட்டியின் முடிவுகளே மாறுகிறது என்றும் ஆல்ரவுண்டர்களுக்கான சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனமும் ஒருபுறம் இருந்து வருகிறது.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறை மூலம் போட்டியின் நடுவில் பந்துவீச்சின் போதோ அல்லது பேட்டிங்கின் போதோ யாரோ ஒரு வீரரை நீக்கிவிட்டு மற்றொரு வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்த விதிமுறை கூறுகிறது. இந்நிலையில் இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவும் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் மூலம் ஆல்ரவுண்டர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது உள்ள சூழலில் ஒருநாள் போட்டிக்கான அணியில் ஆல் ரவுண்டராக இல்லையெனில் அணியில் இடம் பிடிப்பது கடினம். ஆனால் காலப்போக்கில் இதெல்லாம் மாறுமா? இல்லையா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.. இதுதான் என்னோட கணிப்பு – ஏ.பி.டி தேர்வு
நிச்சயமாக இந்த விதிமுறை மூலம் ஆல்ரவுண்டர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆல்ரவுண்டர்கள் தங்களது இடத்தினை பிடிக்க கூடுதலாக உழைக்க வேண்டிய அவசியமும் உள்ளது என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



