அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் தற்போது 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. பலம் வாய்ந்த பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் இதுதான் : ஏ.பி.டி கணிப்பு
இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோத இருக்கும் வேளையில் இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று இந்த தொடரின் இரண்டாவது மிகப்பெரிய போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக தற்போது ஐ.பி.எல் குறித்த செய்திகளே அதிகளவு வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதேபோன்று ஆர்சிபி அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என நினைக்கிறேன்.
மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நல்ல போட்டியாளராக இருப்பதனால் அவர்களும் பிளே ஆப் சுற்றுக்கு வர வாய்ப்புள்ளது. அதே போன்று நான்காவது அணியாக கொல்கத்தா தகுதி பெற முடியும். என்னுடைய கணிப்பின்படி இந்த நான்கு அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். அதே போன்று நான் சிஎஸ்கே அணியை பிளே ஆப் சுற்றுக்கு தேர்வு செய்யவில்லை.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் அந்த இடத்தில் விளையாடினால் நல்லா இருக்கும்.. அதுவே என் விருப்பம் – சுரேஷ் ரெய்னா
தற்போதைய சிஎஸ்கே அணி வலுவான அணிதான் இருந்தாலும் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்களா? என்பதை உறுதி செய்ய முடியாது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைய வைக்கலாம். ஆனாலும் நான்கு அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் நான் சிஎஸ்கே அணியை தேர்வு செய்யவில்லை என ஏபிடி கூறியது குறிப்பிடத்தக்கது.



