ஒரு கேப்டனாக இறுதிப்போட்டி வரை முன்னேற அவர்கள் 3 பேர்தான் காரணம் – வைரலாகும் பாண்டியாவின் பேட்டி

Pandya
Advertisement

கடந்த ஆண்டு வரை 8 அணிகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது நடப்பு 15-வது தொடரில் கூடுதலாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட அணிகளுடன் சேர்த்து மொத்தம் 10 அணிகளுடன் நடைபெற்று வருகிறது. 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 72 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் குவாலிபயர் இரண்டாவது போட்டி மற்றும் இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் புதிதாக பங்கேற்ற லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Miller 2

அதிலும் குறிப்பாக லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் அணி முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்படி தாங்கள் எதிர்கொண்ட முதல் தொடரிலேயே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி கோப்பையை வெல்ல இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.

- Advertisement -

அந்த போட்டியை போட்டியும் அவர்கள் வென்றுவிட்டால் ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்ற அணி என்ற சாதனையைப் படைக்க இருக்கின்றனர். இந்த ஆண்டு ஆரம்பத்தில் குஜராத் அணி அறிவிக்கப்பட்டபோது அந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி உள்ளூர் கிரிக்கெட்டிலும் சரி கேப்டன்சி செய்யாத ஹர்டிக் பாண்டியா இந்த தொடரில் எவ்வாறு கேப்டன்சி செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

Hardik Pandya

இந்நிலையில் குஜராத் அணியில் பெரிய வீரர்கள் இல்லாமல் இருந்தாலும் இறுதிப்போட்டி வரை அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வந்துள்ளார். எனவே அவரது கேப்டன்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் எவ்வாறு கேப்டன்சி செய்யப்போகிறேன் என்பது குறித்து சில கருத்துகளை பாண்டியா பகிர்ந்திருந்தார். அவரது அந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறுகையில் : நான் கோலி, தோனி, ரோகித் ஆகிய மூவரின் தலைமையிலும் விளையாடி உள்ளேன். எனவே அவர்களது மூவரது கேப்டன்சியின் மூலம் எனக்கு நிறைய அனுபவம் உள்ளதால் அதை வைத்து தொடங்க உள்ளேன். கோலியிடமிருந்து உத்வேகத்தையும், தோனியிடம் இருந்து பொறுமையும், ரோகித் இடமிருந்து சுதந்திரத்தையும் நான் கற்றுகொண்டுள்ளேன்.

இதையும் படிங்க : குவாலிபயர் 2 : இன்றைய போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? – பெங்களூரா ? ராஜஸ்தானா? (விவரம் இதோ)

நான் அதை அப்படியே எனது கேப்டன்சியில் பயன்படுத்த உள்ளேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் இந்த தொடரில் தங்களது அணியில் உள்ள வீரர்களை சிறப்பாக வழிநடத்தி சென்றுள்ள பாண்டியா குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement