கேப்டன் ஆயிட்டிங்க. அப்புறம் என்ன பவுலிங் போடுவீங்களா? – நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தனது முதுகுப்பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வருகிறார். அதோடு ஐபிஎல் தொடர் மட்டுமின்றி இந்திய அணியில் அவர் விளையாடிய போதும் முழுநேர பேட்ஸ்மேனாகவே கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆனால் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ அவர் ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமே இந்திய அணியில் பயணிக்க முடியும் என்று தெளிவாக தெரிவித்துவிட்டது.

Pandya-2

- Advertisement -

இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் தனது உடற் தகுதியில் கவனம் செலுத்தும் வகையில் அவர் அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது தீவிரமாக தனது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் உடல் தகுதியையும் பராமரித்து வரும் அவர் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தும் பட்சத்தில் மீண்டும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் இந்திய அணியில் அவருக்கு பதிலாக தற்போது மாற்று ஆல்ரவுண்டருக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகியுள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த அவர் அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதால் குஜராத் அணி அவரை நேரடியாக தேர்வு செய்தது மட்டுமின்றி அவரை கேப்டனாகவும் நியமித்தது.

pandya 1

இந்நிலையில் குஜராத் அணியின் இந்த ஐபிஎல் தொடருக்கான ஜெர்சி அறிமுக விழாவானது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேப்டனான ஹர்திக் பாண்டியாவும். அணி நிர்வாகிகள் ஒரு சில வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

பின்னர் ஜெர்சி அறிமுக விழா எல்லாம் முடிந்த பின்னர் நிருபர்களின் கேள்விக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்தார். அப்போது இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக நீங்கள் பந்துவீசுவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் : இந்த கேள்விக்கு உண்டான பதில் மிகவும் சர்ப்ரைஸ். அந்த சர்ப்ரைஸ் சர்ப்ரைஸாகவே இருக்கட்டும் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க : புதிய ஜெர்ஸியை வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ்! மும்பை பாதி டெல்லி பாதி கலந்த கலவை – என கலாய்க்கும் ரசிகர்கள்

இதன் மூலம் நிச்சயம் அவர் இது தொடரில் பந்து வீசுவார் என்று உறுதியாகியுள்ளது. ஏனெனில் அவர் இந்த ஐ.பி.எல் தொடரில் பந்து வீசாத பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாக முடியாது என்பதால் கண்டிப்பாக அவர் கேப்டனாக இருந்தாலும் பந்து வீசுவார் என்று தெரிகிறது. அதேவேளையில் குஜராத் அணியில் முகமது ஷமி, ரஷித் கான், பெர்குசன் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளதனால் நிச்சயம் அவர்களுடன் ஆல்ரவுண்டரான இவரும் பந்து வீசுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement