- Advertisement -
ஐ.பி.எல்

இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.. மிகப்பெரிய இலக்கை துரத்தியது குறித்து – ஹார்டிக் பாண்டியா மகிழ்ச்சி

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களை குவித்தது.

இந்த வெற்றியை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் : ஹார்டிக் பாண்டியா

பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்தி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது போட்டியின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் கடந்த 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி தங்களது நீண்ட கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு கிடைத்திருக்கிறது. 13 ஆண்டுகள் என்பது மிகவும் மிகப்பெரிய இடைவெளி. இந்த வெற்றியை நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே போட்டியில் வெற்றிபெற வேண்டும் நினைத்தே இந்த போட்டியில் ஆடினோம்.

இந்த வெற்றியை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. மிகப்பெரிய சேசிங்கை நாங்கள் ஆரம்பிக்கும் போது மாடர்ன் டே போட்டிகளில் இது சாத்தியமான ஒன்றுதான் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்ததால் பவர்பிளே ஓவர்களிலேயே நல்ல துவக்கம் கிடைத்தது. கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 250, 240 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 220 ரன்களுக்கு தடுத்து நிறுத்தினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 13 ஆண்டுகால சோகத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்த மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

220 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். அதிலும் குறிப்பாக நல்ல தூக்கம் கிடைத்தால் ஈஸியாக இந்த இலக்கை துரத்த முடியும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது அணியின் துவக்க வீரர்கள் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இந்த போட்டியை நாங்கள் எளிதாக வென்றோம் என ஹார்திக் பாண்டியா மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -