- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : முதல் ஓவரையே அக்சர் பட்டேலுக்கு வீச வழங்க காரணம் இதுதான் – ஹார்டிக் பாண்டியா ஓபன்டாக்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணி தொடரினை கைப்பற்றி இருந்ததன் காரணமாக நேற்று இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் சேர்த்து நான்கு வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்பட்டார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 188 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 64 ரன்களையும், தீபக் ஹூடா 38 ரன்களையும் குவித்து அசத்தினார். அதன் பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் ஸ்பின்னர்களே வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தனர். அதிலும் குறிப்பாக அச்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இப்படி மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 10 விக்கெட் வீழ்த்தியது டி20 வரலாற்றில் சாதனையாக மாறியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் வீசினார். இந்நிலையில் போட்டி முடிந்து முதல் ஓவரை அக்சர் பட்டேலை வீச அழைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் ஹார்டிக் பாண்டியா பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : அக்சர் பட்டேலை நான் முதல் ஓவரிலேயே வந்து வீச அழைத்ததன் காரணம் யாதெனில் பவர்பிளே ஓவர்களில் அவரால் நிச்சயம் சிறப்பாக பந்து வீச முடியும் என்பது எனக்கு தெரியும்.

- Advertisement -

அதன் காரணமாகவே அவரை பயன்படுத்த நினைத்தேன். அதோடு பேட்ஸ்மேன்களின் நகர்விற்கு ஏற்ப அக்சர் பட்டேல் தனது மணிக்கட்டை நகற்றுவார் என்பதை முன்கூட்டியே கணித்த நான் அவருக்கு பந்து வீச வாய்ப்பினை அளித்தேன். அதன்படி அவரும் சிறப்பாக பந்துவீசி முதல் ஓவரிலேயே விக்கெட்டை பெற்றதோடு மட்டுமின்றி மெய்டன் ஓவராகவும் வீசினார் என பாண்டியா கூறினார்.

இதையும் படிங்க : வீழ்ந்துவிட்டார்னு நினைக்காதீங்க – விராட் கோலிக்கு ஜாம்பவான் பிரையன் லாரா கொடுத்த ஆதரவில் கூறியது இதோ

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது இந்திய அணி உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறது. இந்த வேளையில் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் இனிவரும் தொடர்களிலும் நாங்கள் புதிது புதிதாக கற்றுக் கற்றுக்கொள்ள போவதை நிறுத்த போவதில்லை என்று பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by