வீழ்ந்துவிட்டார்னு நினைக்காதீங்க – விராட் கோலிக்கு ஜாம்பவான் பிரையன் லாரா கொடுத்த ஆதரவில் கூறியது இதோ

Lara
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாக உலகின் அனைத்து இடங்களிலும் தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் ஏற்கனவே ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். இருப்பினும் 2019க்குப்பின் பள்ளத்தாக்கை போன்ற மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக அடுத்த சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

kohli

- Advertisement -

அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்த அவர் சாதாரண வீரராக விளையாட தொடங்கினார். அதனால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆனது, சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அரைசதம் கூட அடிக்காதது என முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் சுமாராக செயல்படுவீர்கள் என்று தெரிவித்த கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்கும் நேரம் வந்துவிட்டதாக விமர்சித்தார்கள்.

பெருகிவரும் ஆதரவு:
அதுபோக தொடர்ச்சியாக விளையாடிய களைப்பு ஆட்டத்தில் தெரிவதால் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து வெளியேறிய சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனையை பின்பற்றாத அவர் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்தார். ஆனால் சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார்.

Graeme-Swann-and-Virat-Kohli

இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி ஓய்வெடுப்பாரா என்று அதற்காக தனியாக விமர்சனத்தையும் அவர் சந்தித்தார். இருப்பினும் 70 சதங்களை அடிப்பது சிறிய விஷயமல்ல என்ற வகையில் கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான், ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டவர்கள் விமர்சனத்தையும் மிஞ்சிய பெரிய ஆதரவை விராட் கோலிக்கு கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

லாராவின் ஆதரவு:
அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய முன்னாள் கேப்டனுக்கு பெரிய ஆதரவை கொடுத்துள்ளார். வரலாற்றில் தாம் உட்பட அனைவருமே இதுபோன்ற மோசமான சூழ்நிலையை தாண்டி வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்த கடினமான சூழ்நிலைகள் தான் விராட் கோலி போன்றவரை மேலும் வலுவான வீரராக மாற்றி முன்பை விட மிகச் சிறப்பாக விளையாட உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே அவர் வீழ்ந்து விட்டார் என்று யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர் இதுபற்றி நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா டி20 தொடரின் இறுதியில் பேசியது பின்வருமாறு.

Lara

“ஒரு வீரராக விராட் கோலியை நான் மிகவும் மதிக்கிறேன். மேலும் இந்த மோசமான தருணத்திலிருந்து அவர் முன்பை விட மிகச்சிறந்த வீரராக வெளியே வருவார். இது போன்ற கடினமான தருணத்தில் அவர் மேலும் நிறைய பாடங்களை கற்றுக் கொள்வார். எனவே அவரை நீங்கள் யாரும் வீழ்ந்துவிட்டார் என்று குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று கூறினார்.

ஒரு கட்டத்தில் இதேபோல் சதமடிக்க முடியாமல் சச்சின் தடுமாறியபோது அவர் ஓய்வு பெறவேண்டும் என்று அப்போது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் கடுமையாக உழைத்து அதிலிருந்து மீண்டெழுந்த அவர் 33 வயதிற்குப் பின்பு தான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக இரட்டை சதம், 2011 உலக கோப்பை, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகள் போன்ற வரலாற்று சாதனைகளை படைத்தார். அதேபோல் இந்த மோசமான தருணத்திலிருந்து விராட் கோலியும் மிகச்சிறந்த வீரராக மீண்டெழுந்து விளையாடுவார் என்று பிரையன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி அடுத்ததாக ஆசிய கோப்பையில் விளையாட உள்ளார்.

Kohli

மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் மார்ட்டின் கப்திலை முந்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். அவரைப் பாராட்டி பிரையன் லாரா மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் நம்ப முடியாத திறமை கொண்ட வீரர். ரோகித் சர்மா அபார திறமை கொண்ட வீரர். அவரைப் போலவே இந்திய அணியில் நிறைய வீரர்கள் ஆக்ரோஷமும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement