தோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ஹர்திக் பாண்டிய..! வியப்பில் சக வீரர்கள்.!

pandiya

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐயர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று (ஜூன் 27 ) டப்லின் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐயர்லாந்து அணி இந்திய அணியை அலட்சியமாக எண்ணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
pandiya1

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் கூட்டணி 160 ரன் பார்ட்னர்ஷிப்பை அளித்தனர். இதன் மூலம் இந்திய அணியின் இரண்டாவது அதிகப்படியான பார்ட்னர்ஷிப் என்ற பெருமையை இந்த ஜோடி சேர்த்தது.

ஆட்டத்தின் இறுதி ஒவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. மேலும், இறுதி ஒவரின் கடைசி பந்தில் இந்திய ரசிகர்கள் தோனியின் அபிமான ஹெலிகாப்டர் ஷாட்டை காணும் வாய்ப்பை பெற்றனர். ஆனால், இம்முறை அந்த ஷாட்டை அடித்தது தோனி அல்ல ஹார்திக் பாண்டியா.

ஐயர்லாந்து அணியின் பீட்டர் சேஸ் வீசிய இறுதி ஓவரின் இறுதி பந்தை எதிர்கொண்ட பாண்டிய, தோனியின் ட்ரேட் மார்க் ஷாட்டை அடித்தார். அது வானத்தில் பறந்து எல்லைக்கோட்டை தாண்டி சிக்ஸாக மாறி இந்திய அணியின் ஸ்கோரை 208 என்று ஆக்கியது. இதோ அந்த வீடியோ பதிவு