
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஹார்திக் பாண்டியாவிற்கு காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மிகப்பெரிய பின்னடைவையும் அவர் சந்தித்துள்ளார்.
இருந்தாலும் வெகு விரைவில் அவர் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டி இந்திய அணிக்கு திரும்பும் முனைப்பில் இருக்கிறார். தற்போது 32 வயதை எட்டியுள்ள பாண்டியா எஞ்சியுள்ள தனது கரியரை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் எடுத்த முடிவு யாதெனில் :
மும்பையில் வசித்து வந்த ஹார்டிக் பாண்டியா தற்போது பெங்களூரு நகருக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஏனெனில் பி.சி.சி.ஐ-யின் தேசிய அகாடமி பெங்களூரில் இருக்கும் வேளையில் அங்கு தொடர்ந்து பயிற்சிகளையும், சிகிச்சையும் மேற்கொள்ளவுள்ளார்.
இதன் காரணமாகவே அவர் நிரந்தரமாக பெங்களூரு நகருக்கு குடி பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு அவர் முறைப்படி பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டு தனது கரியரை மிகச் சிறப்பாக முடிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு அந்த வாய்ப்பை கண்டிப்பாக வழங்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் கருத்து
ஏற்கனவே அயர்லாந்து தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ஹார்டிக் பாண்டியா எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் தவற விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.