முடிந்தது ஹார்டிக் பாண்டியாவின் கதை. இன்னும் 6 மாசம் வீட்லயே இருக்கவேண்டியதுதான் – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.

Pandya-1

- Advertisement -

எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் வீரியம் குறித்து அறிய அவர் லண்டன் சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி தற்போது ஹார்டிக் பாண்டியா லண்டன் சென்று அங்குள்ள மருத்துவர்களின் பரிசோதனையில் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாண்டியாவின் காயத்திற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.

Pandya 1

எனவே பாண்டியா விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள போவதாகவும், அப்படி சிகிச்சை மேற்கொண்டபின் ஐந்து மாதங்கள் வரை அவர் முற்றிலும் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement