இந்த ஐ.பி.எல் தொடரில் ஜெயிக்கப்போறது இந்த டீம் தான். இரண்டாம் பாதி நல்லா இருக்கும் – ஹார்டிக் பாண்டியா

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14 ஆவது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகளைக் கொண்ட இரண்டாவது பாதியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Ganguly-ipl

இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்துள்ளன. முதல் போட்டியில் பங்கேற்கவுள்ள மும்பை மற்றும் சென்னை அணிகள் தற்போது அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அங்கு மும்பை அணியின் முக்கிய வீரர்களான பாண்டியா சகோதரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கலந்துகொண்ட இருவரும் இந்திய அணிக்காக விளையாடினார். அதில் டி20 தொடரின் போது க்ருனால் பாண்டியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரோடு சேர்த்து 8 வீரர்கள் இறுதி இரண்டு டி20 போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

mi

இந்நிலையில் தற்போது இவர்களும் தங்களது பயிற்சியை தீவிரமாக அமீரகத்தில் எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : மீண்டும் இங்கு வந்திருப்பது அருமையாக இருக்கிறது. கடைசியாக இங்கு நாங்கள் கோப்பையை கைப்பற்றியது போலவே இம்முறையும் கோப்பையை கைப்பற்றுவோம் இந்த சீசன் நிச்சயம் எங்களுக்கு வெற்றிகரமாக அமையும். அதுமட்டுமின்றி நாங்கள் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என ஹார்டிக் பண்டியா கூறியுள்ளார்.

- Advertisement -

MI

மேலும் அவரை தொடர்ந்து பேசிய க்ருனால் கூறுகையில் : கடந்த முறை இங்கு எங்களுக்கு நல்ல போட்டிகள் அமைந்தன. நாங்களே இங்கு சாம்பியன் ஆனோம். அதேபோன்று மீண்டும் இந்த சீசனின் இரண்டாவது பாதி இங்கு துவங்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறையும் வெற்றி பெற்று மூன்றாவது முறை சாம்பியன் ஆவோம் எனக் க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement