IND vs IRE : முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஏன் ஓப்பனிங்கில் களமிறங்கவில்லை – கேப்டன் விளக்கம்

Ruturaj-and-Hardik
- Advertisement -

ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஜூன் 26-ஆம் தேதி நேற்று டப்ளின் நகரில் துவங்கிய முதலாவது டி20 போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியதால் போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே குவித்தது.

IND vs IRE

- Advertisement -

அயர்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 64 ரன்களை குவித்தார். இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார், கேப்டன் பாண்டியா, ஆவேஷ் கான் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய தீபக் ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இஷான் கிஷன் ஓப்பனிங்கில் களமிறங்காதது பெரிய கேள்வியை எழுப்பியது. ஏனெனில் இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இருக்கும் வேளையில் நேற்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா துவக்க ஜோடியது களம் இறங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Ruturaj Gaikwad

அதோடு இந்திய அணி இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதிவரை ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கிற்கு வரவே இல்லை. அதன் காரணமாக கெய்க்வாட்டிற்கு என்ன ஆனது என்பது குறித்த கேள்வியே அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் பாண்டியா துவக்க வீரராக ருதுராஜ் ஏன் விளையாடவில்லை என்பது குறித்த தகவலையும் வெளியிட்டு இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் பீல்டிங் செய்யும்போது தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவரை துவக்க வீரராக களத்திற்கு அனுப்பி காயத்தை மேலும் பெரிது படுத்த கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே நாங்கள் அவரை துவக்க வீரராக களம் இறக்கவில்லை. அதே வேளையில் இஷான் கிஷனுடன் துவக்க வீரராக யாரை களமிறக்கலாம் என்று யோசித்தபோது முதல் தேர்வாக எங்களுக்கு தீபக் ஹூடா நினைவுக்கு வந்தார்.

இதையும் படிங்க : உம்ரான் மாலிக்கிற்கு ஒரு ஓவரை மட்டுமே கொடுத்தது ஏன்? – வெற்றிக்கு பிறகு கேப்டன் பாண்டியா விளக்கம்

எனவே அவரை விளையாட வைத்ததாக பாண்டியா கூறினார். தனக்கு கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தீபக் ஹூடா 29 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 47 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement