2024இல் எதிர்த்த ரசிகர்கள் இதை செஞ்சா போதும்.. கோப்பை வெல்வது ராக்கெட் சைன்ஸ் இல்ல.. பாண்டியா கோரிக்கை

Hardik Pandya 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் களமிறங்குகின்றன. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பையை இம்முறையும் ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார். இம்முறை அவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் 2024இல் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை குஜராத்திடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி புதிய கேப்டனாக அறிவித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக வான்கடே மைதானத்தில் தங்களுடைய சொந்த அணியின் கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு எதிராக அவர்கள் கூச்சலிட்டனர்.

- Advertisement -

எதிர்த்த ரசிகர்கள்:

டாஸ் வீச வரும் போதும் பவுண்டரிக்கு அருகே செல்லும் போதும் பாண்டியாவுக்கு எதிராக மும்பை ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். இருப்பினும் அந்த வலிகளை தாங்கிக்கொண்ட பாண்டியா தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையில் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட பாண்டியா இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

அந்த வெற்றிக்குப் பின் அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு பாண்டியா முக்கிய பங்காற்றினார். அந்த 2 கோப்பைகளையும் ரோகித் தலைமையில் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றியதால் தற்போது அவரை மும்பை ரசிகர்கள் மனதார தங்களது கேப்டனாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

- Advertisement -

பாண்டியா கோரிக்கை:

இந்நிலையில் இந்த வருடம் மும்பை ரசிகர்களுக்கு பாண்டியா ஸ்பெஷல் கோரிக்கையை வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் மும்பை அணியின் முக்கியமான வீரர் என்று ரசிகர்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். இம்முறை பேட்டிங் செய்யும் போது, சிக்ஸ் அடிக்கும் போது, டாஸ் வீசும் போது எனக்காக ஆரவாரம் செய்து ஆதரவு கொடுங்கள். வான்கடே மைதானத்தில் நமது அணியின் வண்ணத்தை தவிர்த்து மற்ற அணியின் ஜெர்சிகளை நான் பார்க்க விரும்பவில்லை”

இதையும் படிங்க: சிஎஸ்கே போட்டியில் அவர் தான் மும்பை கேப்டன்.. அந்த 3 பேர் இருக்கப்போ கவலையில்ல.. பாண்டியா அறிவிப்பு

“இது தான் மும்பை ரசிகர்களிடம் இருந்து விருப்பம். கடந்த வருடம் கடினமாக இருந்தாலும் பொழுதுபோக்காகவும் இருந்தது. என்னை நான் எப்போதும் மும்பை அணியின் முக்கிய வீரராக கருதுகிறேன். எனது ஆல் ரவுண்ட் திறன்களை வெளிப்படுத்தினால் அது மும்பை வெற்றிக்கு உதவும். இம்முறை வெற்றி பெறுவது ராக்கெட் சைன்ஸ் கிடையாது. வெற்றிக்கு அனைத்து வீரர்களும் நெருக்கமாக இணைந்து பெரிய புன்னகையுடன் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement