சிஎஸ்கே போட்டியில் அவர் தான் மும்பை கேப்டன்.. அந்த 3 பேர் இருக்கப்போ கவலையில்ல.. பாண்டியா அறிவிப்பு

Hardik Pandya
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மார்ச் 23ஆம் தேதி மோதுகின்றன. தலா ஐந்து கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ள சென்னையும் மும்பையும் மோதும் அந்தப் போட்டிக்கு ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் போட்டியில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் அவரை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

- Advertisement -

பாண்டியாவுக்கு தடை:

அத்துடன் 3 போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பாக லக்னோவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் 3வது முறையாக பாண்டியா தலைமையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை பந்து வீசி முடிக்கவில்லை. அதனால் அவருக்கு அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட கடந்த வருடமே தடை விதிக்கப்பட்டது. அந்தப் போட்டி தற்போது சென்னைக்கு எதிராக வரவுள்ளது.

இந்நிலையில் ரோஹித் சர்மா, சூரியகுமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 ஃபார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் மும்பையை வழி நடத்துவார் என்று அறிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார்”

- Advertisement -

சூரியகுமார் கேப்டன்:

“எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம். 2 – 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது”

இதையும் படிங்க: எப்படா நாங்க தோப்போம்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. எங்களை சாதிக்க விடுங்க – ஹாரிஸ் ரவுப் ஆவேசம்

“அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதிர்ஷ்டவசமாக இம்முறை ரோகித், சூரியகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்கள் என்னுடன் விளையாடுகின்றனர். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

Advertisement