IND vs ENG : 3 ஆவது ஒருநாள் போட்டியில் தனது பெஸ்டை பதிவு செய்த ஹார்டிக் பாண்டியா – சூப்பர் தாங்க அவரு

Hardik Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல் ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே முதுகு பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு பந்து வீசாமல் இருந்து வந்தார். ஆனால் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரின் போதே முழு உடல் தகுதியுடன் குஜராத் அணியை வழிநடத்திய அவர் கோப்பையை வென்றும் அசத்தியிருந்தார்.

Hardik Pandya

- Advertisement -

இந்நிலையில் அதன் பிறகு இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடி வரும் பாண்டியா தற்போது பந்து வீச்சிலும் தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் பந்து வீசிய ஹார்டிக் பாண்டியா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தற்போது மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது.

Hardik Pandya 1

அந்த வகையில் இந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து முடித்த இங்கிலாந்து அணியானது 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசியாக ஹார்டிக் பாண்டியா 7 ஓவர்கள் வீசி 3 மெயிடன் வீசியதோடு 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்துவீச்சாக இந்த பந்து வீச்சை அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு அவரது அறிமுக கூட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

இதையும் படிங்க : தோனியை போன்ற மகத்தான கேப்டன் 22 வயதான என்னை நம்புவார்னு எதிர்பார்க்கால – நெகிழும் தெ.ஆ வீரர்

இந்நிலையில் அவருடைய சிறந்த பந்துவீச்சினை அவரே முறியடித்து 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை கைப்பற்றி தனது பெஸ்ட்டை அவர் வழங்கியுள்ளார். இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா வீழ்த்திய நான்கு விக்கெட்டுகளுமே முக்கியமான விக்கெட்டுகள் என்பவை குறிப்பிடத்தக்கது.

Advertisement