தோனியை போன்ற மகத்தான கேப்டன் 22 வயதான என்னை நம்புவார்னு எதிர்பார்க்கால – நெகிழும் தெ.ஆ வீரர்

Lungi
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007இல் தம்மிடம் வழங்கப்பட்ட பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் 2011இல் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதேபோல் 2013இல் தாம் வளர்த்த விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் அதிரடியான பேட்ஸ்மேன், சிறப்பான விக்கெட் கீப்பர் உட்பட பல பரிணாமங்களை கொண்டவர்.

Dhoni

- Advertisement -

ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். அவரது தலைமையில் வாய்ப்பு பெற்று விளையாடிய நிறைய இளம் வீரர்கள் நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுத்துள்ளார்கள். சொல்லப்போனால் இன்றைய இந்திய அணியில் விளையாடும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அவரது வாய்ப்பு மற்றும் ஆதரவால் நட்சத்திரங்களாக வளர்ந்தவர்கள் என்றே கூறலாம்.

மகத்தான தோனி:
அதன் காரணமாகவே அவரது தலைமையில் விளையாடுவதற்கு அனைத்து இளம் வீரர்களும் விரும்புகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சென்னைக்காக 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரது தலைமையில் அவரது ஆலோசனைகளுடன் விளையாடிய பின்பு நிறைய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். குறிப்பாக ட்வயன் ப்ராவோ, டு பிளேஸிஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தாங்கள் நல்ல வீரராக உருவெடுக்க தோனி முக்கிய பங்காற்றியுள்ளார் என்று அவர்களே நிறைய முறை கூறியுள்ளார்கள்.

அந்த வரிசையில் தோனியின் தலைமையில் சென்னை அணியில் விளையாடியது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடுவதற்கு உத்வேகத்தை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். தடையிலிருந்து மீண்டு வந்த 2018 சீசனில் 50 லட்சத்துக்கு சென்னை அணிக்காக வாங்கப்பட்ட இவர் அந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 14.18 என்ற நல்ல சராசரியில் எடுத்து 3-வது சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பந்துவீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தோனியின் நம்பிக்கை:
அந்த சீசனில் 22 வயது மட்டுமே நிரம்பியயிருந்த தன்னைப்பற்றி முன்பின் தெரியாத தோனி நம்பிக்கை வைத்து ஏலத்தில் வாங்கி களத்தில் விளையாட வாய்ப்பு கொடுத்தது தம்மை பொறுத்தவரை மிகப் பெரிய விஷயம் என்று தெரிவிக்கும் லுங்கி ங்கிடி சமீபத்திய பத்திரிகைப் பேட்டியில் பேசியுள்ளது பின்வருமாறு. “எனக்கு 22 வயதாக இருந்தபோது தோனியை போன்ற ஒரு மகத்தான அவர் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்து தனது போட்டிகளை வென்றது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரியதாகும். அதேபோல் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ரசிகர் கூட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பதையும் எனக்கு கற்றுக்கொடுத்தது. ஏனெனில் அதற்கு முன்பு எனது வாழ்நாளில் 60,000 ரசிகர்களுக்கு முன்னிலையில் ஒருபோதும் விளையாடியதில்லை. ஆரம்பத்தில் அது அழுத்தமாக இருந்தாலும் பழகப்பழக தென்றலாக மாறியது” என்று கூறினார்.

lungi

டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணியின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் இவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடினார். அந்த அணியில் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடியது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த வருடம் டெல்லியில் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடியது நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. அவர் இளமையாக இருந்தாலும் ஏற்கனவே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளார். வலைப்பயிற்சியில் அவருக்கு எதிராக பந்துவீச வாய்ப்பு கிடைத்த எனக்கு அவர் நிறைய ஆலோசனைகளை உதவிகளை வழங்கினார்” என்று கூறினார்.

தென் ஆப்பிரிக்காவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா விளையாடிய ஐபிஎல் அணிகள் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஆனால் சென்னையுடன் 2018, 2021 ஆகிய வருங்களில் 2 சாம்பியன் பட்டங்களை வென்றாலும் நம்பர் ஒன் பவுலரான ரபாடாவுடன் பழகுவதற்கு தங்கியதாக தெரிவிக்கும் லுங்கி நிகிடி அவர் தம்மைவிட நீங்கள் தான் உயர்ந்தவர் என்று ஜாலியாக பேசுவார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் டிஎன்பிஎல் தொடரில் களமிறங்கும் 2 இந்திய அணி வீரர்கள் – எந்த அணிக்காக தெரியுமா?

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ரபாடாவிடம் பேசும்போது நான் தயக்கமாக இருப்பேன். இருப்பினும் அவர் “நீங்கள் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்று நிறைய ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளீர்கள், பின்பு ஏன் இந்த தயக்கம்” என்று என்னிடம் கூறுவார்” என தெரிவித்தார்.

Advertisement