இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பத்து வீசுவதாக அறிவித்தது.
ரோஹித் சர்மாவின் பார்ம் பற்றி கவலை வேண்டாம் : ஹார்டிக் பாண்டியா
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் துபே 50 ரன்களையும் குவித்தனர். மும்பை அணி சார்பாக பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதனை தொடர்ந்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை அணியின் சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் எங்களது வழியில் மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறேன். இந்த போட்டி ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த வகையிலேயே இந்த போட்டி ஒரு அதிரடியான போட்டியாக அமைந்தது.
ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் விளையாடிய விதத்தை வெளியில் இருந்து பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் சிறப்பான ஆட்டத்திற்கு வந்துவிட்டால் எதிரணிகள் தோல்வியை சந்திப்பது உறுதி அதைத்தான் இன்று பார்த்துள்ளோம். ரோகித் சர்மாவும், சூரியகுமாரும் விளையாடிய ஆட்டத்தை பார்ப்பது அற்புதமாக இருந்தது.
இதையும் படிங்க : ஓட்டைகளால் இது சரியாக அமையல.. 2020 மாதிரி 2025ம் கஷ்டம்.. அது முடியலன்னா 2026இல் கம்பேக் கொடுப்போம்.. தோனி பேட்டி
இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். ஏனெனில் வான்கடே மைதானத்தில் 175 முதல் 180 ரன்களுக்குள் எதிரணியை நிறுத்துவது மிகச் சிறப்பான ஒன்று. இனிவரும் போட்டிகளிலும் எங்களது இந்த சிறப்பான வெற்றி தொடரும் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



