மூன்றாவது ஒருநாள் போட்டி : ஆட்டநாயகன் விருது பெற்ற பின் நடராஜனை பாராட்டிய பாண்டியா – விவரம் இதோ

Pandya-5
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

Jadeja

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் : நான் டி20 போட்டியில் விளையாடும் அளவிற்கு தற்போது நல்ல தகுதியுடன் உள்ளேன். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நடராஜன் மற்றும் மற்ற பவுலர்கள் அனைவரும் செயல்பட்ட விதம் திருப்தியாக இருக்கிறது.

nattu 1

நடராஜனின் வாழ்க்கை கதை அனைவருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும். அவர் மிகவும் எளிதான பின்புலமுள்ள குடுமபத்தில் இருந்து வந்தவர். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போது இது போன்ற சவால்களை எதிர்த்து சிறப்பாக விளையாட வேண்டும். இன்று மொத்தத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி என பாண்டியா குறித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement