பாண்டியா எப்போது அணிக்கு திரும்புகிறார் தெரியுமா ?. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ? – வெளியான நற்செய்தி

Pandya

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. முதுகுவலி காரணமாக அணியில் இருந்து விலகிய பாண்டியா அதற்கு லண்டன் சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

அதன் பிறகு சில நாட்கள் பயிற்சியும் தொடங்கியவர் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்து இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது உடற்தகுதி காண பயிற்சியினை செய்துவரும் ஹர்டிக் பாண்டியா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணி வீரர்கள் மும்பையில் பயிற்சி செய்திருந்த போதும் அவர்களுடன் இணைந்து பாண்டியா பயிற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூசிலாந்து தொடருக்கு முன் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில் பாண்டியா உடற்தகுதி இன்மையால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து தற்போது தனது உடற்திகுதி குறித்த பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வரும் பாண்டியா பெங்களூரில் உள்ள தேசிய அகாடமியில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் விரைவில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐ.பி.எல் தொடருக்கும் அவர் தயார் ஆகி விடுவார் என்றே தெரிகிறது.