4 தோல்விக்கும் நீங்களே காரணம்.. அவங்க உதவியை நீங்க கேட்கல.. பாண்டியாவை விளாசிய இர்பான் பதான்

Irfan Pathan 8
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இம்முறை 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே ஆரம்பம் முதல் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா தலைமையில் முதல் 3 போட்டிகளில் தோற்ற மும்பை அதன் பின் 2 வெற்றிகளை பெற்றது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்பியதாக கருதப்பட்ட மும்பை மீண்டும் பரம எதிரி சென்னையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டியில் கடைசி 4 பந்துகளில் தோனிக்கு எதிராக 20 ரன்கள் கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

பாண்டியா காரணம்:
இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இதுவரை சந்தித்துள்ள 4 தோல்விக்கும் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றியுள்ளதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். மேலும் ஆசிஷ் நெஹ்ரா போல பொல்லார்ட், பவுச்சர் ஆகிய பயிற்சியாளர்கள் பவுண்டரி எல்லையில் இருந்து உதவி செய்வதற்கு தயாராக இருந்தும் பாண்டியா அதைக் கேட்கவில்லை என பதான் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை அணியை பாண்டியா நன்றாக கையாள வேண்டும். ஏனெனில் மும்பை தோல்வியை சந்தித்த போட்டிகளில் பாண்டியா முக்கிய பங்காற்றியுள்ளார். சென்னைக்கு எதிரான போட்டியில் கூட அவர் ஆகாஷ் மாத்வாலுக்கு கடைசி ஓவர் கொடுக்கவில்லை. கேப்டனாக நீங்கள் தான் அவருக்கு அந்த பொறுப்பை கொடுத்திருக்க வேண்டும்”

- Advertisement -

“அதே போல ரச்சின் ரவீந்தராவின் விக்கெட்டை எடுத்த ஸ்ரேயாஸ் கோபாலுக்கு ஏன் மேற்கொண்டு ஓவர்கள் வழங்கவில்லை? அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பிட்ச்சில் லேசாக மெதுவான தன்மை இருந்தது. அதற்கு நீங்கள் உடனடியாக உங்களை உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரால் இதுவரை சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தம்மை உட்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆஷிஷ் நெஹ்ரா பவுண்டரி எல்லையில் சுப்மன் கில்லுக்கு உதவி செய்கிறார்”

இதையும் படிங்க: இந்தியாவின் 2024 டி20 உ.கோ தரமான விக்கெட் கீப்பர் யார்? லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

“அதே போல பொல்லார்ட், பவுச்சர் ஆகியோர் அங்கே உதவி செய்வதற்காக முயற்சிக்கின்றனர். ஆனால் அதை ஏற்பது பாண்டியாவை பொறுத்தது. பொதுவாக பிளான் ஏ, பி ஆகிய இரண்டையும் பாண்டியா வைத்திருக்க வேண்டும். சூழ்நிலைகளை எதிர்கொள்ள அவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பல வருடங்களாக விளையாடும் அவர் புதியவர் கிடையாது.ல் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தாமல் போனால் தற்போது இருக்கும் சூழ்நிலைகளை தான் அவர் தொடர்ந்து சந்திப்பார்” என்று கூறினார்.

Advertisement